Friday, June 5, 2009
உரையாடல்: சமூக கலை இலக்கிய அமைப்பிற்கான எனது சிறுகதை :
உரையாடல் சமூக கலை இலக்கிய அமைப்பிற்கான எனது சிறுகதை இங்கே.நேற்றே எழுதிவிட்டேன்,ஆனால் நேரங்கெட்ட நேரத்தில் வலையேற்றியதால் யாருமே கண்டுகொள்ளாமல் போனதால் மறுக்கா ஒருமுறை தமிழ்மணத்துல உலவவிட இந்த மொக்கை. இந்த மாசக் கடைசிவரை அவகாசம் இருப்பதால் சிறுகதை என்னும் பெயரில் இன்னும் நிறைய மொக்கைகள் என்னால் எழுதும் அபாயம் இருப்பதால் மேலே குறிப்பிட்டிருக்கும் எனது சிறுகதையை போட்டிக்கு அனுப்பலாமா இல்ல மறுக்கா விட்டத்தைவெறிச்சு வேற எதுனா எழுதனுமான்னு சொல்லுங்க மக்கா. வருகைக்கு நன்றி நன்றி நன்றி...!
Thursday, June 4, 2009
சின்னு
"இப்புடியே தூணுக்குத் தொணையா குந்திக்க,ஒரு ரெண்டாயிர்ருவா பொறட்டரதுக்குத் துப்பு இல்ல,நீயும் ஒரு ஆம்பள" என்று தனது கணவன் சங்கரனை காலையிலேயே அர்ச்சனை செய்துகொண்டிருந்தாள் விஜயா.
"நிறுத்துடி,காலையிலேயே ஒ ராமாயணத்தை ஆரம்பிக்காத நா என்ன சும்மாவா இருக்கே நாலு இடத்திலே சொல்லிவச்சிருக்கேன் பாப்போம்"
"ஆமா கிழிச்ச இன்னேரம் ஒ அக்கா தங்கச்சி வூட்டு தேவைன்னா என்னா பறபறப்ப, இன்னும் நாலு நாளுதா கெடக்கு ஏ அண்ண புள்ளய காதுகுத்து அதுக்குள்ள எதுனா தோது பண்ணல அப்பற நா மனுஷியாவே இருக்க மாட்டே"
ஒரு வாரமா இந்த பஞ்சாயத்துதான் ஓடிகிட்டு இருக்கு, சங்கரனும் பட்டாளத்தார்வீடு, காரவீட்டு அய்யாத்தொரன்னு பலபேருகிட்ட கேட்டு பாத்துட்டான் ஒன்னும் வேலைக்காகல.
விஜயா இன்னும் ஏதோ திட்டிக்கிட்டே இருக்குறாங்றது வீட்டுக்குள்ள பாத்திரங்கள் உருளும் சத்தத்திலேயே தெரிந்தது, இனியும் இங்கே உட்கார்ந்திருந்தா இருக்கிற மானத்தையும் ஏலம் போடுவான்னு நினைத்து கொடியில் கிடந்த காசித்துண்டைத் தோளில் போட்டுக்கொண்டு வீட்டின் கூரையில் சொருகி வைத்த கணேஷ் பீடி கட்டில் பீடி ஒன்றை எடுத்து பத்த வைத்தபடியே கட்டிய லுங்கியோடு வெளியே கிளம்பினான் சங்கரன்.
சங்கரன் நல்ல பாட்டாளி விவசாய சம்பந்தமான அத்தனை வேலைகளையும் செய்வான். வேலையில் படுசுத்தம், வாங்குற காசுக்கு வஞ்சகமில்லாம உழைப்பான்.ஆனா சம்பாதிக்கிற காசுல பாதி சாராயத்துக்கும், பீடிக்குமே செலவழிச்சிடுவான். விஜயா அவனோட மாமன் மகள்தான் கல்யாணமாகி ஆறு வருஷம் முடியபோகுது, சங்கரன் தம்பதிக்கு ஒரே ஒரு மகன் பேரு மணிகண்டன் பஞ்சாயத்து பள்ளியில் ஒன்னாப்பு படிக்கிறான்.
சங்கரனுக்கு சொத்துன்னு பார்த்தா நாலு செண்ட் இடமும், ஒரு சின்ன குடிசையும், நாலு பசுமாடுகளும்தான்.மாடுகளை கவனித்துக் கொள்வது சங்கரனின் அம்மா சொர்ணம்.சொர்ணத்திற்கு அந்த மாடுகள்தான் உசுரு.
வீட்டிலிருந்து கிளம்பிய சங்கரன் கறம்பக்குடியான் டீக்கடையில் நுழைந்தான். எட்டுக்கு ஆறு அளவில் மூனுபக்கம் களிமண்ணால் எழுப்பப்பட்ட கட்டைசுவரும், அதோடு ஒட்டியபடி ரெண்டரையடி உயரத்தில் திண்ணையும், சிமெண்ட்டால் பூசப்பட்ட ஒரு அடுப்பு மேடையும், கறம்பக்குடியான் எந்த காலத்து இளைஞன்றத காட்டிக் கொடுக்கும் "காதல் பரிசு" ராதாவின் புகைப்படம் ஒட்டிய கல்லாப் பெட்டியுமாக இருப்பதுதான் கறம்பக்குடியான் டீக்கடை.
உள்ளூர் பெரியசாமி மக ஓடி போனதிலிருந்து உலக அரசியல்வரை கறம்பக்குடியானுக்கு அத்துப்படி. டீ குடிக்க வர்ற பெருசுங்க கறம்பக்குடியான் பேசுறத, கறம்பக்குடியான் பொண்டாட்டி சானம் போட்டு மெழுகி பச்சையா வச்சிருகிற வாசலை "பொளிச் பொளிச்"சுன்னு வெத்லாக்கு எச்சியைத் துப்பி சிவப்பாக்கிக்கிட்டே கேட்டுக் கொண்டிருப்பார்கள்.
"அண்ணே ஒரு டீ" என்ற சங்கரனிடம் டீயை நீட்டிய கறம்பக்குடியான், "சங்கரா, ஒன்னய பாத்தா வீட்டுக்கு வரச் சொல்லுன்னு பச்சத்துண்டுகாரு சொன்னாரப்பா" என்றார்.
ரெண்டு நாளைக்கு முன்னாடி பச்சத்துண்டுகாரிடம் பணம் கேட்டிருந்தது ஞாபகம்வர அவசர அவசரமாக கறம்பக்குடியானின் சக்கரத் தண்ணிய வாயில ஊத்திக்கிட்டு"கணக்குல வச்சுக்கண்ணே" என்று சொல்லியபடியே பச்சத்துண்டுகாரர் வீட்டிற்குச் சென்றான்.
பச்சத்துண்டுகாரர் எப்போதுமே தோளில் பச்சை கலர் சால்வைய அணிந்து இருப்பார். ஊரில் எல்லோரும் காசித்துண்டோடு இருக்கையில் குஞ்சமெல்லாம் வச்ச சால்வையை அணிந்து செல்வதை பெரிய கௌரவமாக நினைப்பார். மெட்ராஸ்ல வேல பாக்குற அவரு மகன் சுரேசு வந்தா அந்த துண்ட போட்டுக்க மாட்டாரு. அவனுக்கு அது புடிக்காது."யேம்ப்பா இத போட்டுகிட்டு எம் மானத்த வாங்குற ஃபிரண்ஸ்ல்லாம் கிண்டல் பண்றாங்க" என்பான். சுரேசுக்கு தெரியாது ஊருக்குள்ள நிறைய பேருக்கு பச்சத்துண்டுக்காரு மாதிரி நாமும் ஒரு சால்வ வாங்கணும்னு பெரிய லட்சியத்தோட இருக்கிறது.
"வாய்யா சங்கரா,காசு கேட்டிருந்தில்ல,ஒரு ஆயிர்ரூவா சாயங்காலமா வாங்கிக்க" என்ற பச்சத்துண்டுகாரர் கூடவே " கொஞ்சம் நெல்லு இருக்குது டி.என்.சியில போட்டுட்டு வந்திடு" என்றார். ஆத்திர அவசரத்திற்கு ஆயிரமோ ஐநூறோ பச்சத்துண்டுகாருதான் கொடுத்து உதவுவாரு அதனால இப்படி சின்ன சின்ன வேலைகளும் அவருக்கு அப்பப்போ ஓசியா செய்ய வேண்டியிருக்கும்.
ஆயிர்ரூவா பொறட்டியாச்சு இன்னும் ஆயிரந்தான் எப்படியாவது தேத்திடலான்னு மனதிலேயெ நினைத்தவன், சொன்ன வேலையை முடித்துவிட்டு வீட்டிற்குச் சென்றான்.
"என்னாச்சு" என்றாள் விஜயா.
"ஆயிர்ருவா சாயங்காலமா பச்சத்துண்டுகார்ரு கொடுக்குரேன்னிருக்காரு"
"ஆயிரம் ஓவாயா,அத வச்சு என்னாத்த பண்றது. ஏற்கனவே ஏ அண்ணிக்காரி சாட பேசுறா, நீ சபையில ஏ மானத்த வாங்காமவிடமாட்ட போலிருக்கு" என்று மறுபடியும் ஆரம்பித்தவளிடம்,
"ஏண்டி எழவெடுத்தவளே, எந்தலய அடமான வச்சாவது பணத்துக்கு ஏற்பாடு பண்ணிர்றேன்,செத்த நொய் நொய்யிங்காம வவுத்த பசிக்குது சோத்த போடுறியா" என்று சங்கரன் கோபமாய் சீறியபோது,
"ம்ம்மாமா..மா"அலறியது பசுமாடு.
"யம்மோவ்,சின்னு கத்துது பாரு அதுக்கு ரெண்டு எரயெடுத்து போடு"என்று தன் தாய் சொர்ணத்திடம் கூறினான் சங்கரன்.
"ம்ம்ம் சின்ன்ன்னு" என்று அழுத்தி இழுத்த விஜயா,"ஏய்யா இந்த கிழட்டு மாட்ட எதுக்கு இன்னமும் வச்சுக்கிட்டு இனிமேல் அது கன்னு ஈன போறதில்ல எதுக்கு தீனிக்குத் தெண்டமா கெடக்கு,பேசாம அத வித்துடலாம். நீயும் யார்கிட்டயும் போயி காசுக்காக கையகட்டி நிக்கவேண்டாம்"என்றாள். மேலும் "மாட்டுயாவாரி கோயிந்தன வரச்சொல்லி சட்டுபுட்டுன்னு தள்ளிவுட்ற வழிய பாரு" என்றாள்.
இதைக் கேட்டுக்கொண்டிருந்த சொர்ணத்திற்குத் தூக்கிவாரி போட்டது. பெத்தப் புள்ளயாட்டமா வளத்த மாட்ட அடிமாட்டுக்கு விக்க சொல்றாளே என எண்ணிக்கொண்டே சங்கரன் என்ன சொல்ல போறானோன்னு ஏற்கனவே தட்டி முடித்த ராட்டிக்கு ஒத்தடம் கொடுப்பதுபோல் மெதுவா தட்டியவாறே காதைத் தீட்டினாள்.
ஒரு வாரமா பணத்துக்காக கிடந்து அலைந்ததை நினைத்துப் பார்த்த சங்கரன் விஜயாவின் யோசனைக்கு சரியென்று தலையாட்டினான்.
அன்னிக்கி ராத்திரி முச்சூடும் சொர்ணத்தால தூங்க முடியல, பதினஞ்சு வருசத்துக்கு முந்தி சின்னுவை ஈன்ற மூனாவது நாளே அதன் தாய், பாம்பு கடித்து இறந்து போக, சொர்ணந்தான் புட்டி பால் கொடுத்து சின்னு என்று பேர் வைத்து புள்ள மாதிரி வளர்த்து வந்தாள். சொர்ணம் கிணற்றுக்கு தண்ணி எடுக்க போறப்பவெல்லாம் கூடவே சின்னுவும் ஒவ்வொரு நடைக்கும் சொர்ணத்தோடவே போய் வந்து கொண்டிருக்கும். தண்ணியெடுக்க வர்ற மற்ற பொம்பளைங்க "என்ன சொர்ணத்தக்கா ஒம்மவ ஒன்னிய விட்டு பிரியமாட்டாளா"என்று கிண்டலடிப்பார்கள். அப்போவெல்லாம்"ஆமாண்டி சொன்னாலும் சொல்லாட்டியும் எம்மவதான்" என்று கூறியபடியே சின்னுவின் முகத்தைத் வருடி திருஷ்டி முறிப்பாள்.
சின்னு முதல் கன்றை ஈன்றபோது நல்லபடியா கன்றை ஈன்றுவிட்டால் பாலத்தளி செல்லியம்மனுக்கு மொட்டை போடுறதா வேண்டிகிட்டு மொட்டை போட்டுக்கொண்டது, சின்னுவின் பால் காசில் தன் மகள் செல்வியை கட்டிக் கொடுத்தது, ஒரு முறை சங்கரன் குடித்துவிட்டு வந்தபோது சொர்ணம் அவனை ஏதோ திட்டிவிட,சங்கரன் கோபத்தில் சொர்ணத்தை கீழே தள்ளிவிட்டபோது பக்கத்தில் நின்ற சின்னு சங்கரனை ஒரே முட்டாக முட்டியது என ஒன்னு ஒன்னா நினைவுக்கு வந்து அவளை தூங்கவிடாமல் செய்தது. பாதி ராத்திரியில் எழுந்து கொட்டடியில் கட்டிகிடந்த சின்னுவின் அருகில் போய் அமர்ந்துகொண்டு சின்னுவின் தாடையை மெதுவாக தடவி கொண்டிருந்தாள், காவேரி வெள்ளத்தை கண்ணில் கொண்டபடியே.
காலையிலேயே மாட்டுயாவாரி கோயிந்தன் வந்து நின்னதை எதிர்பார்க்காத சங்கரன், "என்னய்யா கோயிந்தா,நானே ஒன்னய பாக்கனும்னுட்டு இருந்தேன்" என்றான்.
"மாடு நிக்குதாம்ல,அதா பார்த்துட்டு போலாம்னு வந்தேன்" என்ற கோவிந்தன் அதே ஊரச் சேர்ந்த மாட்டு வியாபாரி, கேரளாவிற்கு மாடுகளை வாங்கி அனுப்புவதுதான் அவனுக்குத் தொழில்.
"கொப்ப மவளே என்னா வேகமா வேல பாத்திருக்கா" என்று விஜயாவை மனசுக்குள்ளேயே திட்டிக்கொண்டு, சின்னு கட்டி கிடக்கும் கொட்டடிக்கு கோவிந்தனை அழைத்துச் சென்றான் சங்கரன்.
படுத்துக்கிடந்த சின்னுவின் முதுகில் கோவிந்தன் தட்டியதும்,சோம்பல் முறித்தபடி எழுந்து நின்ற சின்னுவை சுற்றிவந்து பார்த்த கோவிந்தன், "டங்கரா இத ரெண்டுவருடத்துக்கு முன்னாடியே வித்துருக்கணுமப்பா" என்றான். கோவிந்தனுக்கு "ச" வரிசை உச்சரிக்க வராது, 'ச'வுக்கு பதில 'ட' சவுன்ட்தான் வரும். இதில என்ன கொடுமைன்னா அவன் பொண்டாட்டி பேரு சரசு. கல்யாணமான புதுசுல இவன் "டரடு டரடு" சொன்னத கேட்டு மெரண்டுபோன சரசு தன் பேரையே இவனுக்காக ராணின்னு மாத்திக்கிட்டா.
"டங்கரா மாட்டுல வெறுந்தோலுதான் இருக்கு" என்று தன் யாவார புத்தியோட பேசிக்கிட்டே"என்ன வெல சொல்ற?" என்றான்.
"நீயே சொல்லுய்யா,என்ன கொடுக்கலாம்"
"இல்லப்பா ஒனக்கு ஒரு கணக்கு இருக்குமுல்ல"
"சரி ரெண்டாயிரத்தைனூறு கொடுத்துட்டு ஓட்டிக்க"
"என்னப்பா நக்கலா பண்ற, ஆயிரத்தைனூறுதான் எங்கணிப்பு. அதுக்கு மேல இதில ஒன்னுமில்ல"
"யோவ் ஒ மாட்டுயாவாரி புத்திய காட்டாம உள்ளூருகார மாதிரி பேசு, கொஞ்சம் பாத்து சொல்லுய்யா"
"டரி உனக்கு வேண்டா எனக்கு வேண்டா, ஆயிரத்தி எண்ணூறு இதுக்குமேல பிடிறாதே" என்று கூறிக்கொண்டே சங்கரன் கையில் நூறு ரூபாய் அட்வான்ஸையும் திணித்துவிட்டு இரண்டு நாள் கழித்து மாட்டை ஓட்டிக் கொள்வதாக சொல்லிவிட்டுச் சென்றான்.
சங்கரன் வாங்கிய அட்வான்ஸை பார்த்தும் விஜயாவும்,சொர்ணமும் எதிரெதிர் உணர்ச்சிகளின் விளிம்பில் இருந்தார்கள்.இருவரின் கண்ணிலும் நீர்.
அடுத்த ரெண்டு நாளும் சொர்ணத்தால் இயல்பாய் இருக்க முடியவில்லை. இதற்கு முன் எத்தனையோ தடவை மாடுகளை விற்றிருக்கிறாள்,ஆனால் சின்னு விஷயத்தில் மட்டும் அவளால் ஏதோ மாடுதானேன்னு இருக்க முடியவில்லை. வழக்கம் போல் மாடு மேய்க்க போனவளின் அருகிலேயே நின்று மேய்ந்து கொண்டிருந்த சின்னு, சொர்ணத்தின் கையை வந்து முகர்ந்து பார்த்தது, எப்போதும் எதாவது தீணி கொறித்துக்கொண்டே இருக்கும் சொர்ணம் சின்னுவுக்கும் ஊட்டிவிடுவது வழக்கம். இன்றைக்கும் அந்த நினைப்பில் கையை முகர்ந்து பார்த்த சின்னுவை,"சனியன போ அங்கிட்டு " என்று கையில் வைத்திருந்த குச்சியால் அடித்து விரட்டி தன் ஆற்றாமையை சின்னுவிடம் காட்டினாள்.
இதை எதிர்பாராத சின்னு சற்று மிரண்டு சிறிது ஓடி திரும்பி சொர்ணத்தையே வெறித்து பார்த்துக்கொண்டிருந்தது.
இரண்டு நாள் கழித்து அந்த ஏரியாவில் வாங்கிய நிறைய மாடுகளை லாரியில் ஏற்றியபடியே வந்து இறங்கிய கோவிந்தனையும், லாரியில் விழிபிதுங்கி நிற்கும் மாடுகளையும் பார்த்த சொர்ணத்திற்கு சின்னுவை நினைத்து துக்கம் தொண்டையை அடைத்தது.
லாரியைவிட்டு இறங்கிவந்த கோவிந்தன் சங்கரனிடம்,"இந்தாப்பா மீதி பணம் டரியா இருக்கான்னு பாத்துக்க, அப்படியே மாட்டையும் கயிறு மாத்தி புடிட்டுக்கொடு" என்றான்.
"கோயிந்தா, ரெண்டு நாளா மனசே சரியில்லப்பா, இந்த மாட்ட பெத்த புள்ளயாட்டமா வளத்துட்டோம் அதப் போயி அறுப்புக்கு கொடுக்க மனசு ஒப்பல, சாகரவரைக்கும் அது இங்கனயே கெடந்துட்டு போகட்டும், எம் பொண்டாட்டிதான் ஏதுனா திட்டுவா அவ என்ன புதுசாவா திட்டப்போறா. இந்தா நீ கொடுத்த அட்வான்ஸ், கோச்சுக்காதப்பா" என்றபடியே சங்கரன் அட்வான்ஸ்ஸைத் திருப்பிக் கொடுத்ததைப் பார்த்த சொர்ணம் சின்னுவின் கழுத்தை இறுகக் கட்டிக்கொண்டு " எம் மக்க்க்க்...கா" என்று விம்மி வெடித்து அழத்தொடங்கினாள்.
உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது

Monday, June 1, 2009
எங்க ஊரில் கிளிக்கியவை...........
மாங்கா மாங்கா கொத்து மாங்கா மார்க்கெட் போகின்ற குண்டு மாங்கா.கமெண்ட் பார்த்து கண்ணை கட்டுதா இதில ஒரு லெமெனை புழிஞ்சிக்கோங்க.
Sunday, May 10, 2009
சூரியனுக்கு டார்ச் அடிக்கிறேன்.
பொதுவாக பத்திரிகைகளில் வரும் தொடர்கதைகளை பெரும்பாலும் வாசிப்பதில்லை.விகடனில் வெளியான கள்ளிக்காட்டு இதிகாசத்தையும், கருவாச்சி காவியத்தையும் கொஞ்ச வாரங்கள் தொடர்ந்து வாசித்துவிட்டு பிறகு புத்தகம் வந்த பிறகே முழுமூச்சாய் வாசித்து முடித்தேன்.ஒவ்வொரு வாரமும் காத்திருக்கும் பொறுமை இருப்பதில்லை.
அதே போன்றே வலைப்பூக்களிலும் சிலர் எழுதும் தொடர் புனைவுகள் என்னை வெகுவாக கவர்ந்திருக்கின்றன ஆனாலும் அவற்றையும் தொடர்ந்து வாசிப்பதில்லை.முழுதாக எழுதி முடிக்கட்டும் என்று காத்திருக்கிறேன்.(உ.ம்:நர்சிம் அவ்ர்கள் எழுதிவரும் மாறவர்மன்).இப்படி தொடர் கதைகளை வாரா வாரம் காத்திருந்து வாசிக்கும் பொறுமையில்லாத எனக்கு என்னையுமறியாமல் ஒரு தொடர்கதையை தொடந்து ஏழு வாரமாக வாசிக்க வைத்துக் கொண்டிருக்கிறது ஒரு பிரபலத்தின் எழுத்து.
பொதுவாக வர்ணனை என்றாலே தாண்டி போய்விடும் என்னை இவரின் வர்ணனைகள்,"எங்கே இதை படிக்காமல் தாண்டி சென்றுவிடு பார்ப்போம்? என்று சவால் விடக்கூடிய வகையில் ரசனையாக இருக்கிறது. வாசித்த பின் அந்த காட்சியை ஒட்டிய கற்பனைகளில் ஒரு சில நிமிடங்களாவது வாசிப்போரை சஞ்சரிக்க வைத்துவிடுகிறார்.
அவரின் கதாபாத்திரங்கள் என்னென்ன உணர்ச்சிகளுக்கு ஆட்படுகிறதோ அதே உணர்ச்சிகளை வாசகனுக்கும் துள்ளியமாக கடத்துகிறது அவரின் எழுத்தின் ஆழுமை.
"விலை உயர்ந்த ஷேம்பேன் நுரையைப் போல மூச்சுக் காற்றுப் பட்டாலே கரைந்து விடுவாளோ என்பதைப் போல மெல்லிய சதை அவளுக்கு. "
"இன்னும் பிறக்காத ஆண்கள் கூட அவளது உதட்டுச் சிவப்பின் முத்தத்துக்கு ஆசைப் படுவார்கள்"
"போதை மருந்துத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப் பட வேண்டிய அவளது மார்புகள்"
"அருகருகே இரண்டு ராமேஸ்வரம் கடல்களைக் கண்டாற் போல் இருந்தது அவளது கண்கள்."
"மீண்டும் ஒரு வாய் பீர் குடித்தவுடன்தான் நான் இந்த உலகத்து போதைக்கு வந்து நார்மலானேன்"
"மதர்த்த பெண்ணிடம் வரும் தீராத ஆசையும்,பெற்ற தாயிடம் வரும் கனிந்த பாசமும் என்னுள் ஒன்று மாற்றி ஒன்றாய்ப் பிரவிகித்தன"
"இரண்டு அழகான பெண்களை ஒரே நேரத்தில் பார்ப்பது இரண்டு நாசிகளாலும் ஒரே நேரத்தில் மூச்சு விடுவதைப் போல சிரமமாக இருந்ததால் நான் பார்வையை வேறு புறம் திருப்பிக் கொண்டேன்"
"அவளது உள்ளங்கையில் இருந்தால் எந்த மலரும் ஒரு வாரத்துக்கு வாடாது.அவ்வளவு குளுமையான,மிருதுவான கைகள்."
மேலே குறிப்பிட்டிருப்பது அக்கதையில் வரும் ஒரு சில வர்ணனைகள்,ஒரு சிலருக்கு இப்போதே புரிந்திருக்கும் எந்த கதையை பற்றி சொல்கிறேனென்று. ஆம் இயக்குனர் திரு.ஷண்முகப்ரியன் அவர்கள் தனது வலைப்பூவான படித்துறையில் எழுதிவரும் "கன்னிகா"வை(வயதுக்கு வந்தவர்களுக்கு மட்டும்) இன்னமும் நிறைய பேருக்கு அறிமுகப் படுத்தலாமே என்ற ஒரு ஆர்வத்தில்தான் சூரியனுக்கு டார்ச் அடிக்கும் வேலையாக இந்த பதிவு. மேலும் தொடர் கதை மட்டுமல்லாமல் பல்வேறு சுவாரஸ்யமான பதிவுகளை மிக ஆழமான கருத்துக்களோடும் எழுதிவருகிறார்.அவரின் வலைபூவிற்கு இந்த வழியாக போங்க.

Friday, May 8, 2009
இரண்டு கவிதைகளும்,ஒரு தத்துவமும்.
மௌனங்களில்...
மனிதம் கருதி
மௌனிக்கிறேன்,
எனது மௌனங்களின்
மொழிபெயர்ப்புகளில்
இருப்பதில்லை மனிதம்..!
ரகசியங்களின் ரகசியம்:
"யாரிடமும் சொல்லாதே" என்றே
என்னிலிருந்து
வெளிப்படும் ரகசியங்கள்
என்னிடமே வருகிறது
"யாரிடமும் சொல்லாதே" என்று..!
"உன்னைச் சுற்றி பொய்களிருக்க,
நீ பேசும் உண்மை உன்னை பொய்யனாக்கும்".
மேலே இருப்பது இரண்டும் கவிதை (அதான் மடக்கி மடக்கி எழுதி ஆச்சர்யக்குறி போட்டிருக்கோம்ல).
மூன்றாவதாக இருப்பது தத்துவம் :))

Thursday, May 7, 2009
இளைய திலகம் பிரபு....
பர்ஸனலா எனக்கு பிடித்த நடிகர் நவரச நாயகன் கார்த்திக்(இப்போ அவர் காமடி பண்ணிட்டு இருக்காரு).இவரைப் பற்றி ஒரு பதிவு எழுதி வேறு யாரேனும் எழுதியிருக்கிறார்களா என வலையில் தேடிய போது அருண்மொழிவர்மனின் இந்த பதிவும்,முரளி கண்ணனின் இந்த பதிவும் நான் எழுதி வைத்திருந்தது ஒன்றுமே இல்லையென்று நினைக்க வைத்ததால் அப்படியே கிடப்பில் போட்டுவிட்டேன்.
1982-ல் சங்கிலியில் சிவாஜியுடன் அறிமுகமாகி தொடர்ந்து நீதிபதி, நேர்மை, சாதனை,வெள்ளை ரோஜா என மேலும் சில படங்களிளும் சிவாஜியுடன் நடித்துக்கொண்டிருந்த பிரபு பிறகு கோழிக்கூவுது,சூரக்கோட்டை சிங்கக்குட்டி போன்ற படங்களின் மூலம் தனிக் கதாநாயகன் ஆனார்.(ரெண்டிலுமே சில்க் ஸ்மிதாதான் ஜோடி).
இந்த படங்களின் வெற்றியால்(வெற்றி படங்கள்தானே முரளி கண்ணன்) அன்றைய நயந்தாரா,திரிஷாக்களான அம்பிகா,ராதா போன்ற பெரிய நடிகைகளுடன் ஜோடிசேர்ந்து முன்னணி கதாநாயகர்கள் வரிசையில் இடம்பிடித்தார்.
1987 ல் வெளியான ஆனந்த் படம் இவரை ஒரு நல்ல நடிகராகவும்,அதே படத்தில் இடம்பெற்ற "ஓல ஓலக் குடிசையிலே" பாடல் பிரபுவை ஒரு சிறந்த டான்ஸராகவும் அடையாளப்படுத்தியது."எப்படி இந்த உடம்பை தூக்கிட்டு அசத்தலா ஆடுறான் பாரு" என அப்போதைய சினிமா ரசிகர்களை ஆச்சர்ய படுத்தினார்.ஆனந்த் படத்திற்கு பிறகுதான் இளம் ரசிக,ரசிகைகள் அவருக்கு கிடைத்தார்கள் என்றால் மிகையில்லை.
முன்னணி நாயகனாக வலம் வந்த போதே எந்தவித ஈகோவும் இல்லாமல் அறிமுக நாயகர்கள் முதல் பெரிய நடிகர்கள்வரை எல்லோருடனும் இரண்டு நாயகர்களில் ஒருவராக சேர்ந்து நடித்த பெருமை தமிழ் திரையுலகில் இவரை மட்டுமே சாரும்.அதுவும் குறிப்பாக அப்போதிருந்த முன்னணி நடிகர்களான ரஜினி(குரு சிஷ்யன்,தர்மத்தின் தலைவன்,சந்திரமுகி),கமல்(வெற்றி விழா,வசூல்ராஜா),விஜயகாந்த்(காலையும் நீயே மாலையும் நீயே),சத்யராஜ்(சின்னத்தம்பி பெரியதம்பி,பாலைவன ரோஜாக்கள்,சிவசக்தி), கார்த்திக்(அக்னி நட்சத்திரம்,உரிமை கீதம்,தை பொறந்தாச்சு,குஸ்தி) ஆகிய எல்லோருடனும் இணைந்து நடித்திருக்கிறார்.
1986ம் வருடம் வெளிவந்த அறுவடை நாளில் பிரபுவும் அவரது அண்ணன் ராம்குமாரும் நடிப்பில் அசத்திருப்பார்கள்.இந்த படம்தான் பின்னாளில் பல படங்களில் அவர் ஏற்று நடித்த வெகுளித்தனமான கதாநாயக பாணிக்கு பிள்ளையார்சுழி போட்டது எனலாம்."சின்னப் பூவே மெல்ல பேசு","ஒருவர் வாழும் ஆலயம்" போன்ற படங்களில் இவர் கதாநாயகன் இல்லையென்றாலும் அப்படங்களில் இவர் எற்று நடித்த கதாபாத்திரங்களாலேயே அந்த படங்கள் பேசப்பட்டன.
எனக்கு பிடித்த இன்னொரு நடிகர் இளைய திலகம் பிரபு,நேற்று டீ.வியில் கல்யாண் ஜுவல்லர்ஸ் விளம்பரத்தில் பார்த்தபோது திடிரென அவரைப் பற்றி ஒரு பதிவு போடலாம்னு தோணியதன் உடனடி விளைவு இப்பதிவு.
1982-ல் சங்கிலியில் சிவாஜியுடன் அறிமுகமாகி தொடர்ந்து நீதிபதி, நேர்மை, சாதனை,வெள்ளை ரோஜா என மேலும் சில படங்களிளும் சிவாஜியுடன் நடித்துக்கொண்டிருந்த பிரபு பிறகு கோழிக்கூவுது,சூரக்கோட்டை சிங்கக்குட்டி போன்ற படங்களின் மூலம் தனிக் கதாநாயகன் ஆனார்.(ரெண்டிலுமே சில்க் ஸ்மிதாதான் ஜோடி).
இந்த படங்களின் வெற்றியால்(வெற்றி படங்கள்தானே முரளி கண்ணன்) அன்றைய நயந்தாரா,திரிஷாக்களான அம்பிகா,ராதா போன்ற பெரிய நடிகைகளுடன் ஜோடிசேர்ந்து முன்னணி கதாநாயகர்கள் வரிசையில் இடம்பிடித்தார்.
1987 ல் வெளியான ஆனந்த் படம் இவரை ஒரு நல்ல நடிகராகவும்,அதே படத்தில் இடம்பெற்ற "ஓல ஓலக் குடிசையிலே" பாடல் பிரபுவை ஒரு சிறந்த டான்ஸராகவும் அடையாளப்படுத்தியது."எப்படி இந்த உடம்பை தூக்கிட்டு அசத்தலா ஆடுறான் பாரு" என அப்போதைய சினிமா ரசிகர்களை ஆச்சர்ய படுத்தினார்.ஆனந்த் படத்திற்கு பிறகுதான் இளம் ரசிக,ரசிகைகள் அவருக்கு கிடைத்தார்கள் என்றால் மிகையில்லை.
முன்னணி நாயகனாக வலம் வந்த போதே எந்தவித ஈகோவும் இல்லாமல் அறிமுக நாயகர்கள் முதல் பெரிய நடிகர்கள்வரை எல்லோருடனும் இரண்டு நாயகர்களில் ஒருவராக சேர்ந்து நடித்த பெருமை தமிழ் திரையுலகில் இவரை மட்டுமே சாரும்.அதுவும் குறிப்பாக அப்போதிருந்த முன்னணி நடிகர்களான ரஜினி(குரு சிஷ்யன்,தர்மத்தின் தலைவன்,சந்திரமுகி),கமல்(வெற்றி விழா,வசூல்ராஜா),விஜயகாந்த்(காலையும் நீயே மாலையும் நீயே),சத்யராஜ்(சின்னத்தம்பி பெரியதம்பி,பாலைவன ரோஜாக்கள்,சிவசக்தி), கார்த்திக்(அக்னி நட்சத்திரம்,உரிமை கீதம்,தை பொறந்தாச்சு,குஸ்தி) ஆகிய எல்லோருடனும் இணைந்து நடித்திருக்கிறார்.
1986ம் வருடம் வெளிவந்த அறுவடை நாளில் பிரபுவும் அவரது அண்ணன் ராம்குமாரும் நடிப்பில் அசத்திருப்பார்கள்.இந்த படம்தான் பின்னாளில் பல படங்களில் அவர் ஏற்று நடித்த வெகுளித்தனமான கதாநாயக பாணிக்கு பிள்ளையார்சுழி போட்டது எனலாம்."சின்னப் பூவே மெல்ல பேசு","ஒருவர் வாழும் ஆலயம்" போன்ற படங்களில் இவர் கதாநாயகன் இல்லையென்றாலும் அப்படங்களில் இவர் எற்று நடித்த கதாபாத்திரங்களாலேயே அந்த படங்கள் பேசப்பட்டன. பிறகு 90களில் பிரபு,குஷ்பு,பி.வாசு கூட்டணி "சின்னத்தம்பி"யில் ஆரம்பித்து பல வெற்றிபடங்களை கொடுத்தனர். பி.வாசுவின் படங்களில்தான் பிரபுவின் கண்ணக்குழி சிரிப்பு,திரு திரு முழிப்பு போன்ற பிரபுவின் மேனரிஸங்கள் பிரபலமாகியது எனலாம். மற்ற முன்னணி நடிகர்களைப் போன்றே இவரின் 100வது படமான ராஜகுமாரனும் ஊத்திக்கொண்டது இதே 90களின் நடுவில்தான்.(விதி விலக்கு விஜயகாந்தின் கேப்டன் பிரபாகரன்).
"சின்னத்தம்பி பெரியதம்பி""அரங்கேற்ற வேளை","சின்ன மாப்ளே","வியட்னாம் காலனி" போன்ற படங்களில் இவரின் காமடி கலாட்டாக்கள் நினைத்தாலே சிரிப்பை வரவைக்கக் கூடியவை.அந்த அளவிற்கு காமெடியிலும் தனது திறமையை நிறுபித்தவர்.கெஸ்ட் ரோலில் இவர் நடித்த "அஞ்சலி","பிரியங்கா" ஆகிய படங்களிலும் சிறிது நேரமே வந்தாலும் அந்த படங்களை நினைக்கும்போது இவரின் நினைவு வருவது இவரின் நடிப்பின் திறமைக்குச் சான்று.

1994 - 1995 வருடங்களில் விஜய், அஜித் போன்ற இளம் நடிகர்களின் அறிமுகமான சமயத்தில் இவர்காலத்து நடிகர்களுக்கு வாய்ப்புகள் குறைய தொடங்கிய நேரத்தில்தான் இயக்குனர் சிகரம் பாலச்சந்தரின் "டூயட்" வாய்ப்பும்,இயக்குனர் இமயத்தின் "பசும்பொன்னும்" இவருக்கு கிடைத்தது.இந்த படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறாவிட்டாலும் பெரிய இயக்குனர்களின் இயக்கத்தில் நடித்த பெருமை அவருக்கு கிடைத்தற்காக பெருமைபட்டிருப்பார்.
பிறகு வாய்ப்புகள் குறைய தொடங்கியதும்,"திருப்பதி ஏழுமலை வெங்கடேசா","கந்தா கடம்பா கதிர்வேலா","பட்ஜெட் பத்மநாபன்","பந்தா பரமசிவம்" போன்ற சிறிய பட்ஜெட் படங்களில் ஃபீல்ட் அவுட்டான ரோஜா,ரம்பா போன்ற நாயகிகளுடன் சேர்ந்து நடித்தார்.இவற்றில் சில படங்கள் வியாபார ரீதியாக வெற்றியும் பெற்றன.
அதன் பிறகு கதாநாயகனாகத்தான் நடிப்பேன் என்றெல்லாம் இல்லாமல் தன் வயதுக்கேற்ற கதாபாத்திரங்களில் நடிக்கத்தொடங்கி "சம்திங் சம்திங்", "தாமிரபரணி","பில்லா","அயன்" என்று பட்டையை கிளப்பிக்கொண்டிருக்கும் பிரபு விளம்பரங்களிலும் அசத்துகிறார்.
கார்த்திக்கும் பிரபு பாணியை கையாண்டிருந்தால் என்னை போன்ற கார்த்திக்கின் ரசிகர்களுக்கு நன்றாக இருந்திருக்கும்.(ச்சே என்ன மாதிரி நடிகன் இப்படி கோமாளி மாதிரி சித்திரிப்பட்டுவிட்டார் அரசியலில்). மணிரத்னத்தின் "ராவணா"வில் இருவரும் நடித்துவருவதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.பார்ப்போம் அக்னி நட்சத்திரங்கள் என்ன செய்திருக்கிறார்களென்று.
Wednesday, May 6, 2009
கேபிள் டீவியின் வருகையும் இயல்பை தொலைத்த கிராமங்களும்.
சின்ன பசங்க நாங்க என்னும் இந்த பதிவில் என்னுடைய சிறுபிராயத்தின் விளையாட்டுகளையும்,அந்த விளையாட்டுகளை கிரிக்கெட் எப்படி ஓரங்கட்டியது என்பதை எங்க ஊரு 20 - 20 என்னும் இந்த பதிவிலும் எழுதியதைத் தொடர்ந்து இன்று கேபிள் டீவியின் வருகையால் தன் சுயத்தை இழந்து கொண்டிருக்கிற எனது கிராமத்தின் இன்றைய நிலையை இப்பதிவில் காண்போம்.
2001ம் வருடம்தான் கேபிள் டீவி இணைப்பு எங்க ஊருக்கு வந்தது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமைக்கும், ஞாயிற்றுக்கிழமைக்கும் காத்திருந்து ஒளியும் ஒலியும் மற்றும் கருப்பு வெள்ளை திரைப்படமுமே பார்த்தவர்களுக்கு,இந்தியத் தொலைக்காட்சியில் முதன் முறையாக திரைக்கு வந்து சில நாட்களே ஆன படங்களும்,புதுப் புது பாட்டுகளும் மொத்தமாய் சிறுசுங்க முதல் பெருசுங்கவரை டீ.வியின் முன் கட்டிப்போட்டது.
குழந்தைகள் அடுத்தவங்க வீட்டில் டீ.வி பார்க்கபோறத விரும்பாத அம்மாக்கள்(சீரியல் பார்க்க குழந்தைகளை சாக்காக வைத்து) உடனேயே தங்கள் வீட்டிற்கும் டீ.வி வாங்க ஆரம்பித்து டீ.வியின் எண்ணிக்கை பெருக பெருக சேனல்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க ஆரம்பித்தது.
வழக்கம்போல் சாயங்காலம் கிரிக்கெட் விளையாட கிளம்பினால் "பங்காளி இன்னைக்கு தலைவர் படம் போடுறான், நாளைக்கு விளையாடுவோண்டா" என ஆரம்பித்து வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொருத்தனின் தலைவர் படங்களுக்கும் ஒவ்வொருத்தனும் இப்படியே சொல்ல தினமும் கிரிக்கெட் விளையாடியது போக வாரத்திற்கு ஒரு நாள் , இரண்டு நாட்கள் என விளையாடுவது குறைந்தது. நாங்களாவது இன்றைக்கும் அப்பப்போ கிரிக்கெட் விளையாடுகிறோம் ஆனால் எங்களின் ஜூனியர்கள் முற்றிலும் WWE வில்(ரெஸ்லிங்) ஐக்கியமாகியும்,அவர்களின் ஜூனியர்ஸ் ஜெடிக்ஸ் போன்ற சேனல்களில் வரும் சாகச வீரர்களிடமும் ஒன்றிப்போய்கிடக்கிறார்கள்.
ஆற்காட்டார் புண்ணியத்தில் அப்பப்போ வீட்டைவிட்டு வெளியே வரும்போதும்கூட இவர்கள் விளையாடுவது டீவியில் பார்த்த அதே காட்சிகளின் சாகச நாயகர்களாக தங்களை பாவித்துக் கொண்டு "ஆ ஊ" என கத்தியும்,குத்தியும் கொண்டுதான் இருக்கிறார்கள்.
கிராமபுறத்து இளைஞர்கள் எப்போதும் உடல் வலிமைமிக்கவர்களாக இயல்பிலேயே இருப்பார்கள்.காரணம் உடல்வலிமையை மறைமுகமாக தந்துகொண்டிருந்த விளையாட்டுகள் கிராமங்களில் நிறைய இருந்ததுதான். இனிவரும் தலைமுறை அப்படியிருக்க வாய்ப்பில்லை,இந்த டீ.வி அவர்களை முழுச் சோம்பேறிகளாக்கி வைத்திருக்கிறது. உட்கார்ந்துகூட பார்ப்பதில்லை, படுத்து கொண்டேதான் டீவி பார்க்கிறார்கள்,விளைவு கொஞ்ச நேரம் நின்னாலே இடுப்புக்கு கையை முட்டுகொடுக்க வேண்டியிருக்கிறது.
நாங்க சின்ன பசங்களா இருந்தபோது இப்படி வீட்டிற்குள்ளே உட்கார்ந்திருந்தால் பெற்றோர்கள் "ஏண்டா இப்படி உட்கார்ந்திருக்க வெளிலபோயி கைய கால உதறி நாலுபேரோட சேர்ந்து விளையாடு"என்று கூறுவார்கள்.ஆனால் இப்போ வெயிலில் கிடந்து அலையாதே கருத்து போயிடுவ(விளம்பர குழந்தைகளின் சிவப்பு படுத்தும்பாடு), ஊர்பயலுவலோட சேராம இங்கேயே டீவிய பாரு" என்று பசங்களின் தாய்குலங்களே சொல்கிறார்கள்.இப்படிதான் நகர்கிறது இன்றைய எங்க ஊர்ப் பசங்களின் கோடைவிடுமுறை.
பசங்களின் நிலை இப்படியென்றால் ஒட்டுமொத்த கிராமத்தின் நிலை இன்னும் பரிதாபம்.முன்னெல்லாம் இரவு பத்து மணிவரை ஆள்நடமாட்டம் வீதிகளிள் தெரியும், இப்போது ஆறு மணியாகிவிட்டால் "மேகலா" விற்காகவும், " கஸ்தூரி"க்காகவும் கவலைப்பட ஆரம்பித்துவிடுகிறார்கள் தங்கமணிகள். தங்கமணிகள் மட்டுமல்ல ரங்கமணிகளும் இப்போது சீரியல் வலையில் சிக்கியிருக்கிறார்கள்.கிராமத்தில் எதாவது அசம்பாவிதம் நடந்தால் அடுத்த ஐந்து நிமிடத்தில் ஊரே திரண்டுவிடும்.இப்போது வீட்டிற்கு பக்கத்திலேயே எதாவது அசம்பாவிதம் நடந்தாலும்கூட எதுவுமே தெரியாமல் "என் கடன் டீ.வி பார்ப்பதே" என்றிருக்கிறார்கள்.
இப்போது வீட்டிற்கு வீடு கலைஞர் டீ.வி.வேறு(இது சேனல் இல்லை தமிழக அரசு வண்ணத் தொலைக்காட்சியைத்தான் இப்படி சொல்றாங்க).கூலி வேலை செய்யும் இடத்தில் எப்போதும் அடுத்தவங்க வீட்டு கதை பேசும் பெண்கள் இப்போது அபியின் கல்யாண பேச்சில் இருக்கிறார்கள்(இது ஒன்னுதான் நல்ல விஷயம்னு நினைக்கிறேன்). எங்காவது வெளியில் செல்ல வேண்டுமென்றால்கூட அன்றைய சீரியலின் சூழல்தான் இவர்களின் பயணத்தை போகலாமா? வேண்டாமா என்று நிர்ணயிக்கின்ற அளவு சீரியல் பைத்தியம் ஆட்டிபடைத்துக் கொண்டிருக்கிறது.இது இப்படியே தொடர்ந்தால் "யாருக்கு எது நடந்தா நமக்கென்ன" என்றிருக்கும் நகரபாணி வாழ்க்கை கிராமங்களிலும் வந்துவிடக்கூடிய சூழல் ரொம்ப தூரத்தில் இல்லை.
எப்படி கிரிக்கெட் எங்க ஊரின் பாரம்பரிய விளையாட்டுகளை மறக்கடிக்கச் செய்ததோ,அதே மாதிரியே இந்த டீ.வியின் மோகம் கிராமங்களின் தனித்துவத்தையும், இயல்பு நிலையையும் தொலையச் செய்து கொண்டிருக்கிறது. பாரதி இப்போதிருந்தால் "என்று தணியும் இந்த டீ.வியின் மோகம்" என்று பாடியிருப்பார்.
நான்கு வருடங்களுக்குப் பிறகு எனது கிராமத்தில் சில நாட்கள் தங்கும் வாய்ப்பு கிடைத்தபோது இந்த மாதிரியான மாற்றங்களைக் கண்டு வேதனையாக இருந்தாலும் குழந்தைகளின் படிப்பு விஷயத்தில் ஓரளவு விழிப்புணர்வு வந்திருப்பது ஒரே ஆறுதலான விஷயம்.

Subscribe to:
Comments (Atom)

இதில் இருக்கும் காய்களின் எண்ணிக்கை ஆறா ? அஞ்சா? மொத்தத்தில் இதுதாங்க ஆரஞ்ச்.

இதுதாங்க உடும்புப் பிடி 