கவிஞர் மு.மேத்தா:
புதுக் கவிதைகள் என்றாலே சட்டென்று நினைவுக்கு வரக்கூடியவர் கவிஞர் மு.மேத்தா. கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக இலக்கியம் மற்றும் திரைத்துறை என இரண்டு தளங்களில் தனது பங்களிப்பை செய்து வருபவர். இன்றைக்கும் திரை
இசை சம்பந்தமான எந்த ஒரு நிகழ்ச்சியிலும் பலராலும் விரும்பி கேட்க/பாடப்படுகிற "ராஜ ராஜ சோழன் நான்" பாடலை எழுதியவர்.
இசை சம்பந்தமான எந்த ஒரு நிகழ்ச்சியிலும் பலராலும் விரும்பி கேட்க/பாடப்படுகிற "ராஜ ராஜ சோழன் நான்" பாடலை எழுதியவர். ரஜினி நடித்த வேலைக்காரன் படத்தில் இவர் எழுதிய"வா வா வா கண்ணா வா" பாடலில் இந்த வரிதான் சிறப்பானது என்று சொல்லமுடியாத அளவிற்கு பாடலில் ஆரம்ப வரியில் இருந்து கடைசி வரிவரை கவிநயத்தோடு காதலைச் சொல்லி அதனுள் மதநல்லினக்கம் பற்றிய ஆழமான கருத்தையும் கூறியிருப்பார்.இவர் திரைப்படங்களுக்கு குறைந்த எண்ணிக்கையிலான பாடல்களையே எழுதியிருக்கிறார் அதற்கு என்ன காரணமென அவரே கூறியிருக்கார், இங்கே சொடுக்கவும்.
இவரின் சில பாடல்கள்:
கற்பூர பொம்மை ஒன்று-கேளடி கண்மணி
என் மன வானில் சிறகை விரிக்கும்-காசி
பெண்மானே சங்கீதம் பாடவா- நான் சிகப்பு மனிதன்
யார் வீட்டில் ரோஜா பூ பூத்ததோ - இதயகோயில்
மயில் போல பொண்ணு ஒன்னு- பாரதி
இவரை பற்றிய மேலும் தகவலுக்கு: http://kavikkudil.wordpress.com/category/uncategorized/
http://groups.google.com.do/group/panbudan/browse_thread/thread/9d05867a4b43b027
http://groups.google.com.do/group/panbudan/browse_thread/thread/9d05867a4b43b027
புலவர் புலமைபித்தன்:
கம்யூனிஸ்ட் சிந்தனைவாதியான இவரின் திரைப்பாடல்களின் வரிகளில் இலக்கியத் தரமும்,புரட்சி சிந்தனைகளும் ஓங்கி நிற்கும்.உன்னால் முடி
யும் தம்பி படத்திற்காக இவர் எழுதிய
யும் தம்பி படத்திற்காக இவர் எழுதிய "புஞ்சையுண்டு நஞ்சையுண்டு" பாடலில்
"வானத்தை எட்டி நிற்கும் உயர்ந்த மாளிகை யாரிங்கு கட்டிவைத்து கொடுத்தது ஊருக்கு பாடுபட்டு இளைத்த கூட்டமோ வீடின்றி வாசலின்றி தவிக்குது"
என்ற வரிகளில் சமூகத்தில் நிலவும் ஏற்ற தாழ்வை சாடியிருப்பார்.குழந்தை வளர்ப்பில் ஒரு தாயின் பங்கு எவ்வளவு முக்கியமென்பதை எடுத்துரைக்க இன்றளவும் மேற்கோள் காட்டப்படும் ."எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே - அவர் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பதிலே" என்ற இந்த வரிகளுக்கு சொந்தக்காரரும் இவரே.
இவரின் சில பாடல்கள்:
சாதிமல்லி பூச்சரமே -அழகன்
தத்திதோம் வித்தைகள் கற்றிட-அழகன்
அதோ மேக ஊர்வலம் - ஈரமான ரோஜாவே
உச்சி வகுந்தெடுத்து - ரோசாப்பூ ரவிக்கைக்காரி
பாடும்போது நான் தென்றல் காற்று-பல்லாண்டு வாழ்க.
இவரை பற்றிய மேலும் தகவலுக்கு :
கவிஞர் முத்துலிங்கம்:
சிறந்த திரையிசைப் பாடலுக்கான தமிழக அரசின் விருதை இருமுறை பெற்ற இவருக்கு அரசவை கவிஞராக இருந்த சிறப்பும் உண்டு.தீவிர எம்.ஜி.ஆர் விசுவாசியான இவர் ஆயிரத்திற்கு மேற்பட்ட திரைப் பாடல்களை எழுதியுள்ளார்.
இவரின் சில பாடல்கள்:
இதழில் கதை எழுதும் நேரமிது-உன்னால் முடியும் தம்பி
மாஞ்சோலை கிளிதானோ-கிழக்கே போகும் ரயில்
சின்னஞ்சிறு கிளியே - முந்தானை முடிச்சு
பூபாளம் இசைக்கும் - தூரல் நின்னு போச்சு
மாஞ்சோலை கிளிதானோ-கிழக்கே போகும் ரயில்
சின்னஞ்சிறு கிளியே - முந்தானை முடிச்சு
பூபாளம் இசைக்கும் - தூரல் நின்னு போச்சு
கூட்டத்திலே கோயில் புறா- இதய கோயில்
இவரை பற்றிய மேலும் தகவலுக்கு
கவிஞர் பிறைசூடன்:
எண்பதுகளின் இறுதியிலும்,தொன்னூறுகளின் ஆரம்பத்திலும் நிறைய பாடல்களை எழுதியிருக்கிறார்.இவரின் பிடிவாத குணமே அதிகம் வாய்ப்புகள் வராததற்
கு காரணமாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்.சில மாதங்களுக்கு முன் குமுதம் இணைய பக்கத்தில் இவரது பேட்டி இடம் பெற்றிருந்தது.அதில் இவரின் பதில்களை பார்த்தால் வாய்ப்பின்றி இருப்பதற்கான காரணம் தெரியும்.நல்ல சிந்தனையாளர் கொஞ்சம் வளைந்து கொடுக்கும் தன்மை இருந்தால் இன்னும் சாதித்திருப்பார் என்று நினைக்கிறேன்.
கு காரணமாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்.சில மாதங்களுக்கு முன் குமுதம் இணைய பக்கத்தில் இவரது பேட்டி இடம் பெற்றிருந்தது.அதில் இவரின் பதில்களை பார்த்தால் வாய்ப்பின்றி இருப்பதற்கான காரணம் தெரியும்.நல்ல சிந்தனையாளர் கொஞ்சம் வளைந்து கொடுக்கும் தன்மை இருந்தால் இன்னும் சாதித்திருப்பார் என்று நினைக்கிறேன்.திங்கள்தான் தென்றல்தான் - கேளடி கண்மணி
சோலை பசுங்கிளியே-என் ராசாவின் மனசில
மணிக்குயில் இசைக்குதடி-தங்க மனசுக்காரன்
மீனம்மா மீனம்மா-ராஜாதி ராஜா
உயிரே உயிரே இது தெய்வீக-எல்லாமே என் காதலி
ரசிகா ரசிகா-ஸ்டார்
போர்க்களம் இங்கே-தெனாலி
நடந்தால் இரண்டடி - செம்பருத்தி
இவர்களை தவிர "சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு","பாட்டு தலைவன் பாடினான்" போன்ற பாடல்களை எழுதிய ந.காமராசன்,"மலையோரம் மயிலே",
"எங்கிட்ட மோதாதே","குயில் பாட்டு ஓ வந்ததென்ன",போன்ற பாடல்களை எழுதிய கவிஞர் பொன்னடியான்,"கண்ணதாசனே கண்ணதாசனே வந்துவிடு", "கண்ணுக்கும் கண்ணுக்கும் மோதல்","எங்கெங்கு நீ சென்ற போதும்"போன்ற பாடல்களை எழுதிய கவிஞர் காமகோடியான்,பஞ்சு அருணாச்சலம் போன்ற இன்னும் சில கவிஞர்களும் பல மறக்க முடியாத பாடல்களை தந்திருக்கிறார்கள்.
இயக்குனர் ஆர்.வி.உதயகுமாரின் படங்களுக்கு பெரும்பாலும் அவரே பாடல்களை எழுதியிருப்பார்.இயக்குனர் கங்கை அமரனும் "சிந்திய வெண்மணி", "செந்தூரப் பூவே செந்தூரப் பூவே" போன்ற நிறைய பாடல்களை எழுதியிருக்கிறார்.இயக்குனர் ஆபாவானனும் இணைந்த கைகள்,செந்தூர பூவே, ஊமை விழிகள் போன்ற தனது படங்களில் இடம்பெற்ற பாடல்களை எழுதியிருக்கிறார்.
"முத்தமிழே முத்தமிழே","செம்பூவே பூவே உன் மேகம் நான்" என அசத்தல் பாடல்களை எழுதிய கவிஞர் அறிவுமதி மற்றும் அவரின் வழித் தோன்றல்களான ந.முத்துகுமார்,பழனிபாரதி,பா.விஜய்,யுகபாரதி,சினேகன் என இன்றைய திரையுலகில் உலாவரும் சில கவிஞர்களை வரும் பதிவுகளில் பார்க்கலாம்.
இங்கே குறிப்பிட்டிருக்கும் கவிஞர்களை பற்றி எனக்குத் தெரிந்த/திரட்ட முடிந்த வரையில் தகவல்களை கொடுத்திருக்கிறேன்.இவர்களை பற்றிய உங்களுக்கு தெரிந்த தகவல்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே.
டிஸ்கி 1:
டி.ராஜேந்தரின் பாடல்களைப் பற்றி தனி பதிவிடயிருப்பதால் இங்கே குறிப்பிடவில்லை.
டிஸ்கி 2:
பொதுவாக வானொலி மற்றும் தொலைக்காட்சியில் திரைப் பாடல்கள் ஒலிபரப்பப்படும் போது படத்தின் பெயரும்,இசையமைப்பாளர் மற்றும் பாடியவர்கள் பெயரை மட்டுமே அறிவித்துவிட்டு பாடலாசிரியரை குறிப்பிடுவதில்லை அதை மனதில் கொண்டே இப்பதிவை எழுதினேன்.
No comments:
Post a Comment