தீபன் சக்கரவர்த்தி:
பழம்பெறும் பாட
கரான திருச்சி லோகநாதனின் கலைவாரிசான இவரின் இசைத்திறமையை பறைசாற்ற நிழல்கள் படத்தில் இடம்பெற்ற "பூங்கதவே தாழ்திறவாய்" பாடல் ஒன்று போதும்.நல்ல குரல் வளம் இருந்தும் மிகவும் குறைவான எண்ணிக்கையிலேயே திரையில் பாடியிருக்கிறார். தற்போது சின்னத்திரையில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
கரான திருச்சி லோகநாதனின் கலைவாரிசான இவரின் இசைத்திறமையை பறைசாற்ற நிழல்கள் படத்தில் இடம்பெற்ற "பூங்கதவே தாழ்திறவாய்" பாடல் ஒன்று போதும்.நல்ல குரல் வளம் இருந்தும் மிகவும் குறைவான எண்ணிக்கையிலேயே திரையில் பாடியிருக்கிறார். தற்போது சின்னத்திரையில் நடித்துக் கொண்டிருக்கிறார்.இவரின் அண்ணன் டி.எல்.மஹாராஜனுக்கும் இதே நிலைதான்.ஆனாலும் இவர் பக்தி பாடல்கள் பாடுவதில் பிஸி.
தீபன் சக்கரவர்த்தி பாடிய சில பாடல்கள்:
செவ்வந்தி பூக்களில் செய்த வீடு -மெல்ல பேசுங்கள்
அரும்பாகி மொட்டாகி பூவாகி-எங்க ஊரு காவல்காரன்
தேவதை போலொரு பெண்ணிங்கு-கோபுர வாசலிலே
டி.எல்.மகாராஜன் பாடிய சில பாடல்கள்:
நீ கட்டும் சேலை மடிப்பிலே - புதிய மன்னர்கள்
பூவாட்டம் காயாட்டம் கன்னித் தோட்டம்-அரவிந்தன்
காதல் யோகி - தாளம்
காதல் யோகி - தாளம்
எஸ்.என்.சுரேந்தர்:
மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதனால் நல்ல குரல் வளம் உடையவர் என்ற பாராட்டை பெற்றவர்.1980 களின் ஆரம்பத்தில் இளையராஜாவின் இசையில் நிறைய பாடல்களை பாடியிருக்கிறார்.நடிகர் மோகனுக்கு தொடர்ந்து பின்னணி பேசியவர்.நடிகர் விஜயின் தாய் மாமாவான இவர்,விஜய் நடித்த ஒன்ஸ்மோர் படத்தில் 'பூவே பூவே பெண்பூவே' என்ற பாடலையும் ப்ரியமுடன் படத்தில் "ஒயிட் லகான் கோழி" பாடலையும் பாடியிருக்கிறார்.இவரின் சில பாடல்கள்:
தேவன் கோவில் தீபம் ஒன்று -நான் பாடும் பாடல்
தனிமையிலே ஒரு ராகம் - சட்டம் ஒரு இருட்டறை
மாமரத்து பூவெடுத்து,கண்மணி நில்லு - ஊமை விழிகள்
பாரிஜாத பூவே - என் ராசாவின் மனசில
அருண் மொழி:
இசைஞானி இளையராஜாவிடம் புல்லாங்குழல் இசைகலைஞராக இருக்கும் அருண்மொழி ஒரு சிறந்த பின்னணி பாடகராகவும்,விஜய் நடித்த சந்திரலேகா படத்தில் இடம் பெற்ற 'அரும்பும் தளிரே' என்ற பாடலை எழுதி தன்னை ஒரு பாடலாசிரியராகவும் பண்முகம் காட்டியவர்.நடிகர் பார்த்திபன் படங்களுக்கு பெரும்பாலும் இவரே பாடியிருப்பார்.இளையராஜாவின் இசையில் பார்த்திபன் நடித்த "தாலாட்டு பாடவா" படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களையும் பாடும் வாய்ப்பை பெற்றவர்.
இவரின் சில பாடல்கள்:
மேக வீதியில் நூறு வெண்ணிலா(மனோவுடன்)-வெற்றிக் கரங்கள்
வராது வந்த நாயகன்,நீதானா நீதானா -தாலாட்டு பாடவா
ஆத்துல அன்னக்கிளி - வீரா
தென்றலுக்கு தெரியுமா - பாரதி கண்ணம்மா
உன்னை காணாமல் நானேது-கவிதை பாடும் அலைகள்
மனசுக்குள்ள நாயனச் சத்தம்-மல்லு வேட்டி மைனர்
புன்னை வனப் பூங்குயிலே- செவ்வந்தி
நானென்பது நீ அல்லவோ- சூரசம்ஹாரம்
மனோ:
இவருக்கு அறிமுகமெல்லாம் தேவையில்லை,1990 களின் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், தேவா, சிற்பி, எஸ்.ஏ.ராஜ்குமார் என அனைத்து இசையமைப்பாளர்கள் இசையிலும் ஏராளமான ஹிட் பாடல்களை பாடியவர். இப்போது இவருக்கு தமிழில் வாய்ப்புகள் இல்லையெனினும் தெலுங்கில் பாடிக் கொண்டிருக்கக் கூடும். தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியான ரஜினிகாந்தின் முத்து மற்றும் சிவாஜி படங்களுக்கு சூப்பர் ஸ்டாருக்கு பின்னணி பேசியவரும் இவரே.
இவரின் ஒரு சில பாடல்கள்(ரொம்ப பெரிய பட்டியல் போடவேண்டும் இருப்பினும் சில):
மலையாளக் கரையோரம்,மீனம்மா மீனம்மா - ராஜாதி ராஜா
பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா -பாண்டியன்
செண்பகமே செண்பகமே - எங்க ஊரு பாட்டுக்காரன்
அந்தியில வானம் - சின்னவர்
வீரபாண்டி கோட்டையிலே - திருடா திருடா
முக்காலா முக்காப்புலா-காதலன்
அழகிய லைலா- உள்ளத்தை அள்ளித்தா
தில்லானா தில்லானா- முத்து
ஓ பிரியா பிரியா- இதயத்தை திருடாதே
அதோ மேக ஊர்வலம்-ஈரமான ரோஜாவே
இவர்கள் தவிர ராசா மகன் படத்தில் இடம்பெற்ற 'காத்திருந்தேன் தனியே' பாடலை பாடிய சந்திரசேகர்(இவர் இளையராஜாவின் குழுவில் டிராக் பாடுபவர்),'தாமர பூவுக்கும் தண்ணிக்கும்' மற்றும் 'மானா மதுர குண்டு மல்லிகை' ஆகிய பாடல்கள் பாடிய பாடகர் பெயர் சரியாக நினைவில்லை ஏதோ கிருஷ்ணாவில் ஆரம்பிக்கும்(கிருஷ்ண சந்தரோ?),'வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா' புகழ் கிருஷ்ணராஜ்(இவர் சமீபத்தில் பருத்தி வீரனில் ஐயய்யோ பாடலை பாடியிருக்கிறார்) ஆகியோரின் குரலும் வித்யாசமாய் இருக்கும்.
கொசுறு:ரொம்ப சீனியர் பாடகர்களான எஸ்.பி.பி, கே.ஜே.ஏசுதாஸ், மலேசியா வாசுதேவன் என பெரும் சாதனையாளர்களை இந்த பட்டியலில் சேர்க்கக் கூடாது.
கொசுறு:ரொம்ப சீனியர் பாடகர்களான எஸ்.பி.பி, கே.ஜே.ஏசுதாஸ், மலேசியா வாசுதேவன் என பெரும் சாதனையாளர்களை இந்த பட்டியலில் சேர்க்கக் கூடாது.

No comments:
Post a Comment